பாதுகாப்பு அமைச்சகம்
டோக்கியோவில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை
Posted On:
08 SEP 2022 2:45PM by PIB Chennai
அமைச்சர் ஹயாஷி அவர்களே, அமைச்சர் ஹமாடா அவர்களே, டாக்டர் ஜெயசங்கர் அவர்களே, ஊடகவியலாளர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,
முதற்கண் அன்பான விருந்தோம்பல் மற்றும் சிறப்பாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ஜப்பான் அமைச்சர்கள், அவர்களது குழுவினருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று எங்களது விவாதத்தின் போது, பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது. ஆசியாவின் இரண்டு எழுச்சிமிகு ஜனநாயக நாடுகள் என்ற வகையில், சிறப்பு பாதுகாப்பு மற்றும் உலக ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த உறவுகள் உள்ளன.
இன்றைய விவாதத்தின் போது, ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பகிர்வுகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் உள்ள சிக்கல்களை அகற்றி மேலும் வாய்ப்புகளை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. முப்படைகள் மற்றும் கடலோரக் காவல்படையிடையே, உயர்மட்ட பேச்சுவார்த்தையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. போர் விமானப் பயிற்சியை விரைவில் தொடங்குவதற்கு இரு விமானப்படைகளும், நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பன்னோக்கு பயிற்சியும் முதன் முறையாக ஜப்பான் கலந்துகொண்டது.
இந்தியாவுக்கும்-ஜப்பானுக்குமிடையே பாதுகாப்பு தளவாடம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முக்கிய முன்னுரிமை அம்சமாகும். இந்திய பாதுகாப்பு வழித்தடங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் ஜப்பான் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தியுள்ளன. ஜப்பானின் அமைச்சர்களுடன் நடைபெற்ற விவாதங்கள், ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857778
**************
(Release ID: 1857806)