குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 04 SEP 2022 6:09PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஆசிரியரும், தத்துவ மேதையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான  டாக்டர். எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். மாணவர்களிடம் அறிவு மட்டுமின்றி, மனிதநேய விழுமியங்களை விதைக்க முயற்சிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம்.

புதிய ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நமது ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களையும் திறமையையும் மேம்படுத்த முயற்சிக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை-2020 மூலம் நமது கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. நமது கல்வி முறையில் இந்திய கலாச்சார விழுமியங்களையும் மொழிகளையும் சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.

உன்னதமான ஆசிரியத் தொழிலில் அதிக திறமைசாலிகள் சேருவார்கள் என்று நம்புகிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு அவர்களின் முயற்சிகள் காரணமாகும்.

நமது  ஆசிரியர்களின் முயற்சிகள் கல்வித் துறையில் புதிய உயரங்களை எட்ட உதவும் என்று நான் நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

**************


(Release ID: 1856686) Visitor Counter : 190