குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐஐடிக்கள் தேசத்தின் பெருமை: குடியரசுத் தலைவர் முர்மு

Posted On: 03 SEP 2022 4:56PM by PIB Chennai

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தேசத்தின் பெருமை என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். புதுதில்லியில் இன்று (செப்டம்பர் 3, 2022) ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில், ஐஐடிக்களின் கதை சுதந்திர இந்தியாவின் கதை.

இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடிக்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

ஐஐடியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை  உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஐஐடி டெல்லியிலும் மற்ற ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர்.

மேலும், ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.

கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856523

**************


(Release ID: 1856558) Visitor Counter : 225