வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மின்னணு வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு திரு பியூஷ் கோயல் தலைமை வகித்தார்
Posted On:
30 AUG 2022 7:15PM by PIB Chennai
மின்னணு வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திரு பியூஷ் கோயல் தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய திரு கோயல், பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சியின் முன்னெடுப்புகளை தொடரும் போது, மின்னணு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து சிறிய, மின்னணு வர்த்தகத்தைச் சாராத வர்த்தகர்கள் இடையே மின்னணு வர்த்தக வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
வெளிப்படையான கொள்கைகள் மூலம் நுகர்வோரிடையே நம்பிக்கையை அவசியம் உருவாக்க வேண்டும் என்றும் குறைதீர்ப்பு மையங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். கள அளவில் இக்கட்டமைப்பை அமல்படுத்த வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855563
**********
(Release ID: 1855578)