மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பாலியில் நடைபெறவுள்ள ஜி-20 4-வது கல்விப்பணிக்குழு மற்றும் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்கவுள்ளார்
Posted On:
29 AUG 2022 8:56PM by PIB Chennai
பாலியில் நடைபெறவுள்ள ஜி-20 4-வது கல்விப்பணிக்குழு மற்றும் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர்
திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்கவுள்ளார்.
கல்வியின் மூலம் மிகவும் உறுதியான, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, நீடிக்கவல்ல எதிர்காலத்தை கட்டமைப்பதை நோக்கிய இந்தியாவின் சிறந்த நடைமுறைகளை நாம் பகிரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஜி-20 உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் உடனான இருதரப்பு கூட்டங்களிலும் அவர் பங்கேற்பார். இந்தியா தலைமையில் அடுத்த நடைபெறவுள்ள ஜி-20 கல்விப்பணிக்குழு கூட்டத்திற்கு இந்தியா அடையாளம் கண்டுள்ள மையப் பொருள்களின் முன்னுரிமை குறித்து அவர் எடுத்துரைப்பார்.
***************
(Release ID: 1855339)
(Release ID: 1855407)
Visitor Counter : 99