பிரதமர் அலுவலகம்

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்

Posted On: 28 AUG 2022 6:52PM by PIB Chennai

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன்  தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். "இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின்  வலுவாக உள்ளது" என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

கடந்த எட்டு ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்று, குஜராத்-மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் தொடங்கி உத்தரப்பிரதேசத்தின்   வாரணாசியில்  உள்ள ருத்ராக்ஷ் மையம் வரை, பல வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா-ஜப்பான் நட்புறவுக்கு எடுத்துக்காட்டுகளாகும் என்று அவர் கூறினார். இந்த நட்பைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக நமது நண்பரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ஷின்சோ அபேயை நினைவு கூர்வார்கள். அபே அவர்கள்  குஜராத்திற்கு வருகைதந்து இங்கு தனது நேரத்தை செலவிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், அதை குஜராத் மக்கள் அன்புடன் நினைவுகூர்வதாக தெரிவித்தார். "இன்று பிரதமர் கிஷிடா இரு  நாடுகளையும்  நெருக்கமாகக் கொண்டுவர அபே மேற்கொண்ட முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறார்" என்று அவர் மேலும் கூறினார்.  "நமது  முயற்சிகள் எப்போதும் ஜப்பான் மீது தீவிரமும் மரியாதையும் கொண்டவை, அதனால்தான் சுசூகியுடன் சுமார் 125 ஜப்பான்  நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

 

இந்த விழாவிற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜப்பான் பிரதமர் கிஷிடா , 4 தசாப்தங்களாக மாருதி சுசூகியின் வளர்ச்சி இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான வலுவான பொருளாதார உறவுகளை உள்ளடக்கியது என்றார். இந்திய சந்தையின் வலிமையை உணர்ந்ததற்காக சுசூகி நிர்வாகத்தை அவர் பாராட்டினார். “இந்த வெற்றிக்கு இந்திய மக்கள் மற்றும் அரசின் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளதாக   நான் கருதுகிறேன். சமீபகாலமாக, பிரதமர் மோடியின் வலுவான தலைமை காரணமாக  உற்பத்தித் துறைக்கான பல்வேறு உதவி நடவடிக்கைகளால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமடைந்து  வருகிறது”, என்றும் அவர் கூறினார்.

 

இந்த விழாவில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு சதோஷி சுசூகி, குஜராத் முதலமைச்சர், திரு  பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர், திரு சி ஆர் பாட்டில், மாநில அமைச்சர், திரு ஜகதீஷ் பஞ்சால், சுசூகி சுசூகி மோட்டார் நிறுவனத்தின்  முன்னாள் தலைவர், திரு ஓ சுசூகி, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் திரு டி.  சுசூகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ஜப்பான் பிரதமர். திரு ஃபூமியோ கிஷிடாவின் வீடியோ செயதியும் திரையிடப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855063

***************



(Release ID: 1855084) Visitor Counter : 175