பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்

Posted On: 28 AUG 2022 10:14AM by PIB Chennai

தற்சார்பு இந்தியா முயற்சியின் கீழ், ராணுவத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ் நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த பட்டியலின் விவரங்கள் http://www.srijandefence.gov.in/ என்ற தளத்தில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குப் பிறகு இந்த பொருட்கள் அனைத்தும் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப்பட்டுள்ளன. 458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும்  நிலை உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854936

 ***************(Release ID: 1854993) Visitor Counter : 102