பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது

प्रविष्टि तिथि: 23 AUG 2022 6:50PM by PIB Chennai

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை இந்தியபங்களாதேஷ் சர்வதேச எல்லையில் மீட்டது. பங்களாதேஷ் மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 19-20 ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 27 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கப்பல்வரத்மீட்டது. 5 பேரை இந்திய மீனவர்கள் மீட்டனர். மீனவர்கள் 32 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச எல்லையில், பங்களாதேஷ் கடலோரக் காவல் படை கப்பல்தாஜுதீன்’ (பிஎல் -72) மூலம் பங்களாதேஷிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853927 


(रिलीज़ आईडी: 1853948) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी