பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஜூலை மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை

Posted On: 23 AUG 2022 1:50PM by PIB Chennai

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2,453.19 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது இலக்கைவிட 5.57% குறைவாகும்.  கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.76% குறைவாகும். கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான மொத்த உற்பத்தி 9912.42 ஆயிரம் மெட்ரிக் டன் ஆகும்.  இது இந்த காலத்திற்கான இலக்கில் 2.17% குறைவாகும்.  கடந்த ஆண்டு இதேகாலத்தில் செய்யப்பட்ட உற்பத்தியைவிட இது 0.50% குறைவாகும். 

     எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் ஓஎன்ஜிசி ஜூலை மாத உற்பத்தி 1636.56 ஆயிரம் மெட்ரிக் டன்னாகும். இது இந்த மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 3.36% குறைவாகும்.

     ஆயில் இந்தியா நிறுவனத்தின் ஜூலை மாத கச்சா எண்ணெய் உற்பத்தி 263.70 ஆயிரம் மெட்ரிக் டன்னாகும்.  இது அந்த மாத இலக்கைவிட 8.11% குறைவாகும்.  

      தனியார் மற்றும் கூட்டு முயற்சி நிறுவனங்களின் ஜூலை மாத கச்சா எண்ணெய் உற்பத்தி 552.92 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது.  இது அந்த மாதத்தின் இலக்கை விட 10.45% குறைவாகும்.

   இயற்கை வாயுவைப் பொறுத்தவரை ஜூலை மாதத்தில் 2882.54 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கனமீட்டராக இருந்தது. இது அந்த மாதத்தின் இலக்கைவிட 3.33% குறைவாகும்.  

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853815

**************



(Release ID: 1853838) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Hindi , Manipuri