குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு ஜனநாயகத்திற்கு பாதுகாப்பான உத்தரவாதம்- குடியரசு துணைத்தலைவர்

Posted On: 22 AUG 2022 6:58PM by PIB Chennai

வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு ஜனநாயகத்திற்கு. பாதுகாப்பான உத்தரவாதம் தரும் என்று  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த அவருக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய அவர், நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது என்றும் இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை என்றும் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு விகாஷிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853650

-----(Release ID: 1853681) Visitor Counter : 274