புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு கடனுதவி வழங்க, மகாத்மா பூலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கையெழுத்திட்டது
Posted On:
22 AUG 2022 4:16PM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, மகாத்மா பூலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது முழுவதும், மகாத்மா பூலே பிற்படுத்தப்பட்ட வகுப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். (49% இந்திய அரசுக்கும், 51% மகாராஷ்டிர அரசுக்கும் சொந்தமானது). இந்த ஒப்பந்தத்தின்படி, மாநில பயன்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்களின் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக செயல்படுத்தப்படும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக, மகாத்மா பூலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிதியுதவிகளை அளிக்கும்.
இந்த ஒப்பந்தத்தில், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.பிரதீப் குமார், மற்றும் மகாத்மா பூலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு.பிபின் ஸ்ரீமாலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853602
***************
(Release ID: 1853631)
Visitor Counter : 202