சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் உயர்த்தவேண்டியுள்ளது : மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி
Posted On:
21 AUG 2022 2:45PM by PIB Chennai
இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று தெரிவித்துள்ளார். " 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்" என்று அவர் கூறினார். மும்பையில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (ஏசிசிஇ) ஏற்பாடு செய்துள்ள கட்டுமானப் பொறியியலாளர்கள் மற்றும் சார்புத் தொழில்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
மாநாட்டில் பொறியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே உரையாற்றிய அமைச்சர், உள்கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய திறனைப் பெற்றுள்ளது என்றார். "இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள் , இழுவைப் போக்குவரத்து மற்றும் கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன" என்றும் தெரிவித்தார்.மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசிய திரு கட்கரி, ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில், எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும்" என்றார்.
இந்திய உள்கட்டமைப்புத் துறையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார். "நல்ல தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளை உலகம் முழுவதிலுமிருந்தும் இந்தியாவிற்குள்ளிருந்தும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தரத்தில் சமரசம் செய்யாமல் செலவைக் குறைக்க மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். கட்டுமானத்தில் நேரம் மிக முக்கியமான அம்சம், அது மிகப்பெரிய சொத்தாகும்.' கட்டுமானப் பொறியாளர்களின் இன்ஜினியர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இது மிகவும் முக்கியமானது என்றார்.
சாலை அமைப்பதில் பசுமையான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான தமது யோசனையை முன்வைத்த மத்திய போக்குவரத்து அமைச்சர், "சிமென்ட் மற்றும் பிற மூலப்பொருட்களுக்கு மாற்றினை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எஃகுக்கு பதிலாக கண்ணாடி நாரிழை எஃகினை பயன்படுத்தலாம். போட்டி இருந்தால், செலவும் குறையும். நியாயமானதாகவும் இருக்கும்" என்றார்.
1 லிட்டர் எத்தனால் விலை ரூ. 62, ஆனால் கலோரி மதிப்பின் அடிப்படையில், 1 லிட்டர் பெட்ரோல் 1.3 லிட்டர் எத்தனாலுக்குச் சமம் என்று திரு கட்கரி கூறினார். "இந்த யோசனையுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்துப் பணியாற்றியது. இப்போது பெட்ரோலிய அமைச்சகம் எத்தனாலின் கலோரி மதிப்பை பெட்ரோலுக்கு சமமானதாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்திற்கு சான்றளித்துள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853431
**************
(Release ID: 1853445)
Visitor Counter : 230