அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புனே சிஎஸ்ஐஆர்-ன் புதிய கட்டட வளாகத்தை, மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்துவைத்து, ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார்.

Posted On: 20 AUG 2022 5:49PM by PIB Chennai

புனே-யில் கட்டப்பட்டுள்ள மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல் & தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார். 

சிஎஸ்ஐஆர்- தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் இந்த புதிய கட்டடம், புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழாவையொட்டி, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 புத்தாக்க (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும்,  உலகின் முதலாவது இரட்டை மின்சார வசதி கொண்ட இருகட்ட டெஃபிபிரில்லேட்டர்களை உருவாக்கவும்,  ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.  

இயற்கை உணவுக் கழிவுகளிலிருந்து உயிரி-எரிவாயு தயாரிப்பதற்கான, இந்தியாவின் முதலாவது & மிகப்பெரிய சுருக்கப்பட்ட உயிரிஎரிவாயு ஆலை, பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன்வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக்கூடிய  சென்சார் தொழில்நுட்பம், மற்றும்  அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்குவதற்கான அடுத்த தலைமுறை வேளாண் உயிரியை உருவாக்கவும்,  வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853323 

*******



(Release ID: 1853358) Visitor Counter : 156