திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக, பழங்குடியின இளைஞர்களிடையே, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், ராஞ்சியில் கிராமின் உத்யாமி திட்டம் தொடக்கம்
Posted On:
20 AUG 2022 5:00PM by PIB Chennai
பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று(20.08.2022) தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். பழங்குடியின சமுதாயத்தினரை தொழிலாளர்களாக ஈடுபடுத்தி, அவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்து, அவர்களது இருப்பிடத்திற்கேற்ப, தற்சார்பு உடையவர்களாக மாற்ற வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு.பிஸ்வேஷ்வர் டூடு உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், காணொலி வாயிலாக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.அர்ஜுன் முண்டா, பழங்குடியின மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முழுமையான நோக்கம் என்றார். இத்திட்டத்தையும் சேர்த்து, பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். பழங்குடியின இளைஞர்கள் அதிக திறன் உடையவர்களாக உள்ள நிலையில், அந்தத் திறனை அவர்கள், சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தி, உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக குறிப்பைக் காணவும்- https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853313
*****
(Release ID: 1853355)