மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 9 வது பொதுக்குழு கூட்டத்தின் போது “மத்சய சேது” செயலியில் இணைய வழி மீன் சந்தைக்கான சிறப்பு பகுதியை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 19 AUG 2022 3:06PM by PIB Chennai

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் 9 வது பொதுக்குழு கூட்டத்தின் போது “மத்சய சேது” செயலியில் இணைய வழி மீன் சந்தைக்கான சிறப்பு பகுதியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  நேற்று தொடங்கிவைத்தார். பிரதமரின் மத்சய சம்படா  திட்டத்தின் மூலம் ஹைதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் புவனேஸ்வரியில் உள்ள ஐசிஏஆர் – சிஐஎஃப் ஏ மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டது. மீன் குஞ்சுகள், தீவனம், மருந்துகள் போன்ற   இடுப்பொருள்களுக்கான ஆதாரங்களை அறியவும், மீன்வளர்ப்புக்கு தேவையான சேவைகளை அறியவும், மீன்வளர்ப்போர் மற்றும்  இதனோடு தொடர்புடையவர்களுக்கு இணைய வழி சந்தை உதவும்.  மேலும் மீனவர்கள் தங்களின் மீன்களை விற்பனைக்கும் இதில் பட்டியலிடலாம். மீன்வளர்ப்பு துறைகளில் உள்ள அனைவரையும், ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.

இந்த கூட்டத்தில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளர்ப்போரின் திறனை கட்டமைக்க  முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு தீவிரமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, அவர்கள் பல வகையான விவரங்களை அறிந்துகொள்வதற்கு பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு முதன் முறையாக சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவில் தொழில் முனைவோர்களால் புதிய தொழில் ஊக்குவிப்பை அரசு மேற்கொண்டுள்ளது என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

நாட்டில் அதிகரித்து வரும் மீன் தேவையை நிறைவேற்ற புதிய தலைமுறை தொழில் முனைவோர் முன் வரவேண்டும் என்று மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சீவ் பல்யான் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், பல்வேறு மாநில அரசுகளைச்சேர்ந்த மீன் வளத்துறை அமைச்சர்கள், பல யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853126

***************

 (Release ID: 1853126)


(रिलीज़ आईडी: 1853164) आगंतुक पटल : 310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Kannada