கலாசாரத்துறை அமைச்சகம்
சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, நாட்டின் பல்வேறு ஜவுளி பாரம்பரியங்களை உள்ளடக்கிய 'சூத்ரு சந்தாதி' கண்காட்சி
Posted On:
19 AUG 2022 2:56PM by PIB Chennai
கலாச்சார அமைச்சகம், தேசிய அருங்காட்சியகம் ஆகியவை, அபேராஜ் பல்டோடா அறக்கட்டளையுடன் இணைந்து, இந்தியா சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக, நாட்டின் பல்வேறு ஜவுளி பாரம்பரியங்களை ஒன்றிணைத்து, 'சூத்ரு சந்தாதி' என்ற கண்காட்சியை நேற்று நடத்தியது. இந்த கண்காட்சி 2022 செப்டம்பர் 20 வரை நடைபெறும்.
இந்த கண்காட்சியை கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. கோவிந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
'சூத்ரு சந்தாதி' என்றால், நூலின் தொடர்ச்சி என்று பொருள். கண்காட்சியின் தலைப்பாக இடம்பெற்றுள்ள இந்த பெயர், இந்தியாவில் சமூகம், கலாச்சாரங்களிடையே நடந்து கொண்டுள்ள உரையாடல்களின் உருவகமாக, அதன் பரிணாமத்தை பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கிறது. 75 முக்கியக் கைவினைக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்களின் 100-க்கும் மேற்பட்ட ஜவுளிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853123
***************
(Release ID: 1853153)
Visitor Counter : 165