எஃகுத்துறை அமைச்சகம்

தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் 76-வது சுதந்திரதினத்தை கொண்டாடியது

Posted On: 15 AUG 2022 2:13PM by PIB Chennai

எஃகு அமைச்சகத்தின் கீழுள்ள நாட்டின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான நவரத்னா சுரங்க நிறுவனமான, தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் 76-வது சுதந்திரதினத்தையொட்டி, ஐதராபாத்தில் உள்ள அந்நிறுவன தலைமையகம் மற்றும் அதன் திட்டம் செயல்படும் பிற இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய சுதந்திரதினத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது. தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் திரு. சுமித் தேவ், ஐதராபாத்தின் தலைமையகத்தில், நிறுவனத்தின் மூத்த பணியாளர் திரு.சங்கரியாவுடன் இணைந்து பணியாளர்கள் முன்னிலையில் மூவண்ணக் கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான திரு.சுமித் தேப், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் தன்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நேரத்தில், தாய்நாட்டுக்கு மரியாதை, நன்றி தெரிவிக்கும் வகையில், அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி கொண்டாட்டத்தில் முழுமனதுடன் பங்கேற்க வேண்டும். மகத்தான இந்த தேசத்தின் நெறிமுறைகளை பாதுகாப்பது நமது கடமை.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852022

                                                     ***************



(Release ID: 1852086) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Hindi , Manipuri