உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குவாலியரில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் கி சத்ரிக்கு திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா விஜயம்

Posted On: 14 AUG 2022 2:41PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழா மற்றும் பிரிவினை கொடுமை நினைவு தினத்தையொட்டி, குவாலியரில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் கி சத்ரியில் சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு  ஜோதிர் ஆதித்ய சிந்தியா புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச அரசின் எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரதுமான் சிங் தோமர், குவாலியர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விவேக் நாராயண் ஷெஜ்வால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர், “வரலாற்றில் எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுக்காத ஒரே நாடு இந்தியா மட்டுமே, ஆனால் பல வெளிநாட்டு படையெடுப்புகளை சந்தித்துள்ளது. இந்தப் படையெடுப்புகளுக்கு அடிபணிவதற்குப் பதிலாக, இந்திய மக்கள் எப்பொழுதும் துணிச்சலையும், தீரத்தையும் வெளிப்படுத்தி, எந்த ஒரு அந்நிய சக்தியையும் நம் நிலத்தில் குடியேற அனுமதிக்கவில்லை. நமது தேசியக் கொடி நமது தியாகத்தின் சின்னம், நமது கலாச்சார மேலாதிக்கம் மற்றும் நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாம் நாளை 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம், மேலும் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவை மீண்டும் சிறந்ததாக மாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

**************



(Release ID: 1851832) Visitor Counter : 199