வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி விழாவில் திரு பியூஷ் கோயல் தேசியக் கொடி ஏற்றினார்

प्रविष्टि तिथि: 13 AUG 2022 3:57PM by PIB Chennai

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷனில் தேசியக் கொடியை ஏற்றினார்

இந்நிகழ்வின் போது,  சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய திரு கோயல், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது சத்யாகிரகத்தில் அனைவரையும் ஈடுபடுத்தியதில் காந்திஜி முக்கியப் பங்காற்றிய விதம், அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பாபுவின் தூய்மை இந்தியா கனவை நனவாக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

விடுதலையின் அமுதப்பெருவிழாவை நாம் கொண்டாடும் போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வேகமாக முன்னேற்றி, இந்த நாட்டை வளர்ந்த மற்றும் வளமான நாடாக மாற்ற உறுதி எடுப்போம் என்று திரு கோயல் கூறினார்.உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வணிஜ்ய பவனில் அமைக்கப்பட்டுள்ள பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் குறித்த கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

***************


(रिलीज़ आईडी: 1851539) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी