சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்று திறனாளிகளுக்கான பண்டிட். தீன்தயாள் உபாத்யாய தேசிய நிறுவனம், மாற்று திறனாளிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது

Posted On: 11 AUG 2022 4:29PM by PIB Chennai

புதுதில்லியிலுள்ள, மாற்று திறனாளிகளுக்கான பண்டிட். தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிப்பதற்கான முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் முதல்படியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஒருவருக்கு முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதுகுத் தண்டுவட சீராக்குதல் உபகரணத்தை வடிவமைத்துள்ளது. இன்று (11.08.2022) மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் டாக்டர்.வீரேந்திர குமார் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பண்டிட். தீன்தயாள் உபாத்யாய தேசிய நிறுவன வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில். இந்த முதுகுத் தண்டுவட சீராக்குதல் உபகரணம் பாயல் சோலங்கி என்ற நபருக்கு பொருத்தப்பட்டது.

கணினி வாயிலாக ஸ்கேன் செய்யப்பட்டு, நோயாளியின்  தேவைக்கேற்ப மிகப் பொருத்தமாக இந்த உபகரணம் வடிவமைக்கப்படுவதால் அவர்களின் ஊறு விளைவுகள் பெருமளவில் குறைகின்றன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850915

                           ***************


(Release ID: 1851020) Visitor Counter : 151