குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துகள்

Posted On: 10 AUG 2022 5:43PM by PIB Chennai

ரக்க்ஷா பந்தனையொட்டி, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“ரக்க்ஷா பந்தன் திருநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரக்க்ஷா பந்தன் என்பது சகோதரிகள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் தினமாகும். அவர்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை வெளிப்படுத்துவதற்கான தருணம் ஆகும். ரக்க்ஷா பந்தன் தன்னிச்சையான பரஸ்பர அன்பை குறிக்கிறது. மேலும் மக்களை நெருக்கமாக்குகிறது.

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சகோதர, சகோதரிகளுக்கிடையே கொண்டாடப்படும் இந்த பண்டிகை, நமது சமூகத்தில், நல்லிணக்கத்தையும், மகளிர் மீதான மரியாதையையும் ஊக்குவிப்பதாக அமையட்டும்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850562

                             ***************


(Release ID: 1850610) Visitor Counter : 176