குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மக்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல் தேவை என்பதைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்

Posted On: 09 AUG 2022 4:44PM by PIB Chennai

 குடிமக்களை மையப்படுத்திய மற்றும் பதிலளிக்கக்கூடிய நிர்வாகத்திற்காக மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே தொடர்ந்த உரையாடலின் அவசியத்தைக் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும்  கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல்முறையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

 குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று தம்மை  சந்திக்க வந்த 2018 மற்றும் 2019 தொகுப்புகளின் இந்திய தகவல் சேவை அதிகாரிகளிடம் உரையாற்றிய திரு நாயுடு, அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக்  குறைப்பதில் தகவல்தொடர்புகளின் பங்கினை  எடுத்துரைத்தார். “ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு  அவர்களின் தாய்மொழியில் தகவல் தந்து  அதிகாரம் அளிக்க வேண்டும். மறுபுறம், அரசுகளும் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி  சரியான நேரத்தில் நிறைவேற்ற  வேண்டும்,”என்று அவர் கூறினார்.

வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் குறித்து  எச்சரித்த திரு  நாயுடு, இலவச கலாச்சாரம் பல மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் மோசமடைய வழிவகுத்தது என்றார். "அரசு நிச்சயமாக ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்தியாவின்  குடியரசு துணைத் தலைவராக இருந்த திரு  நாயுடு தமது கடைசி உரையில், “ஒரு சாதாரண விவசாயியின் மகனிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது அரசியல் சாசனப் பதவிக்கு நான் உயர்வதற்கான திறவுகோல் முழுக்க முழுக்க கடின உழைப்பு, ஒரே மனப்பான்மை, தொடர்ச்சியான பயணம்,   நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான தொடர்பு. மக்களை சந்தித்து பேசியதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்." என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850265     

*******



(Release ID: 1850282) Visitor Counter : 188