சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மின்கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
Posted On:
08 AUG 2022 4:35PM by PIB Chennai
மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் துறையை முறைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மின்கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, மறுசுழற்சிகளுக்கான அலகுகளின் கட்டாயப் பதிவுக்கு வழிவகுக்கிறது. மேலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தரநிலை இயக்க நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மின்கழிவு மறுசுழற்சி அலகுகளை கண்காணித்து வருகின்றன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் மறுசுழற்சி தொழிலை முக்கியமான மற்றும் நவீனமயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மின்கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, மின்னணு கழிவுகளை அகற்றி மறுசுழற்சி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கான அங்கீகாரம், பதிவு, திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
இந்த தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான இணையமைச்சர் திரு.அஷ்வின் குமார் சௌபே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849863
***************
(Release ID: 1850043)
Visitor Counter : 341