குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் கலாச்சாரம், சுற்றுலா திட்டங்களை குடியரசு துணைத் தலைவர் ஆய்வு செய்தார்

Posted On: 08 AUG 2022 5:30PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத் துறை தொடர்பான திட்டங்களின் நிலை குறித்து  குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று  ஆய்வு செய்தார்.

     மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன்ரெட்டி தலைமையிலான சுற்றுலா அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த மாநிலங்களில் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.  ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநில அரசுகளின் நெருக்கமான ஒத்துழைப்பில் பணி செய்வதன் மூலம் திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்ய திரு நாயுடு யோசனை தெரிவித்தார்.

     சுதேசி தரிசன திட்டத்தின்கீழ் நிறைவு செய்யப்பட்ட திட்டங்கள் (ஆந்திரப்பிரதேசத்தின் கடற்கரையோர சுற்றுலா, புத்த சமயம் சார்ந்த சுற்றுலா, தெலங்கானாவில் சூழல் சுற்றுலா, பழங்குடி பகுதி சுற்றுலா, பாரம்பரிய பகுதி சுற்றுலா) பற்றி சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

     பணிகளின் முன்னேற்றத்திற்காக அதிகாரிகளை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், திட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்த தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849929  

***************



(Release ID: 1850040) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Hindi , Telugu