குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், எம்எஸ்எம்இ-களுக்கான திட்டங்களின் அமலாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2022 3:25PM by PIB Chennai

     நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இரண்டு பெரிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன

  1. அவசரகால கடன் உத்தரவாத திட்டம்: கொவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டும் வணிகத்தைத் தொடங்கவும், செயல்பாட்டுக்கான செலவை எதிர்கொள்ளவும் தகுதிவாய்ந்த எம்எஸ்எம்இ-களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவிசெய்ய தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக மே 2020-ல் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2023 மார்ச் 31 வரை செல்லுபடி உள்ளதாகும்.
  2. தற்சார்பு இந்தியா நிதியம்: வளர்ச்சியடைவதற்கான ஆற்றலையும், சாத்தியத்தையும் கொண்டுள்ள எம்எஸ்எம்இ-களின் சமபங்கு நிதியை கொண்டு வருவதற்காக தற்சார்பு இந்தியா நிதியத்தை மத்திய அரசு அறிவித்தது.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849804

*************** 


(வெளியீட்டு அடையாள எண்: 1849869) வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati , Telugu