உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பைக்கும் அகமதாபாதிற்கும் இடையேயான ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்


உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஜனநாயகமயமாக்கலை இந்தியா காண்கிறது: திரு சிந்தியா

அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 கோடி விமானப் பயணிகளை நாடு எதிர்நோக்கி உள்ளது: திரு சிந்தியா


Posted On: 07 AUG 2022 4:58PM by PIB Chennai

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் முதல் விமானத்தை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை அமைச்சர் திரு வி கே சிங்கும் இன்று மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 தில்லி சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஆகாச ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை தில்லியில் அமைச்சர்கள் திரு சிந்தியா, திரு வி கே சிங், சிவில் விமானத்துறை செயலாளர் திரு ராஜீவ் பன்சல் ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர். ஆகாசா ஏர் விமான நிலைய நிறுவனர் திரு ராக்கர்ஸ் ஜூன்ஜூன்  வாலா அவரது துணைவியார் ரேகா ஜூன்ஜூன்  வாலா, ஆகாச ஏர் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி திரு வினய் துபே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சிந்தியா, இந்த முதல் விமான பயணம் இந்திய சிவில் விமான போக்குவரத்து சரித்திரத்தில் ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் அவரது பேரார்வமுமே இந்திய சிவில் விமான போக்குவரத்தில் ஜனநாயக மயமாக்கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். முன்பு இந்த துறை மிக உயர் வகுப்பினருக்கானதாக இருந்தது என்றும், இப்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காரணமாக மலிவான விமானப் பயணம் ஏழை எளியவர்க்கும் சாத்தியமாக்கி உள்ளதாக அமைச்சர் கூறினார். இத்தகைய தருணத்தில் சிவில் விமான போக்குவரத்து துறையில் நுழைந்து உள்ள ஆகாச ஏர் விமான நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்காகவும் நாட்களில் ஆகாச ஏர் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்று கூறிய அமைச்சர் உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள  425 வழித்தடங்கள் ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும் என்றும் 68 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமாக நாட்டில் மொத்தம் 100 விமான நிலையங்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். போக்குவரத்து துறையில் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்துக் போலவே உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும்  நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

•••••••••••••

 


(Release ID: 1849434) Visitor Counter : 257