பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சிஏடி) ஐந்தாண்டுகளில் 91% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது, மேலும் வழக்குகளின் தீர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 06 AUG 2022 3:19PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சிஏடி) மூன்று ஆண்டுகளில் 91% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது என்றும் மேலும் வழக்குகளின் தீர்வு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும்  மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை   (தனி பொறுப்பு) ;  புவி அறிவியல் துறை (தனி பொறுப்பு) ; பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட சிஏடியின் தலைவர் நீதிபதி ரஞ்சித் வசந்தராவ் மோரே , டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, பிரதமர்  உத்தரவின்படி நிலுவையில் உள்ள வழக்குகளில் ஏறக்குறைய பூஜ்யம் நிலையை  அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தார். மோடி அரசு வெளிப்படைத்தன்மை மற்றும் "அனைவருக்கும் நீதி" என்பதில் உறுதியாக உள்ளது என்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நல சீர்திருத்தங்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

மோடி ஆட்சியில் 2015 முதல் 2019 வரைதீர்வு விகிதம்  91 சதவீதத்திற்கு மேல் எட்டப்பட்ட நிலையில், 2010 முதல் 2014 வரை யுபிஏ ஆட்சியில் இது 89 சதவீதமாக இருந்தது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நிலுவையில் இருந்ததால் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமிப்பதில்   தாமதம் ஏற்பட்டபோதிலும் 2020 ஆம் ஆண்டில்  104 சதவீத தீர்வு  விகிதம் பதிவு செய்தது என மத்திய நிரவாகத்  தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி எல். நரசிம்ம ரெட்டி, விளக்கமளித்ததை  அமைச்சர் எடுத்துரைத்தார்.

கொவிட் பாதிப்புகள் இருந்தபோதும், கேட் அமர்வுகள் ஆன்லைன் மூலம் வழக்குகளை பைசல் செய்ய  தங்களால் இயன்றவரை முயற்சி செய்ததாக அமைச்சர் தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய்களின் போது, மொத்தம் 55,567 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பாதகமான சூழ்நிலை இருந்தபோதும், 54 தீர்வு சதவீதத்துடன் சுமார் 30,011 வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது  ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின் , 28.05.2020 தேதியிட்ட அறிவிப்பின்படி, தீர்ப்பாயத்தின்  2 பெஞ்சுகள் நிறுவப்பட்டன. ஜம்மு பெஞ்ச் 08.06.2020 முதல் செயல்பாட்டுக்கு வந்தது, அதேசமயம் ஸ்ரீநகர் பெஞ்ச் 23.11.2021 அன்று தம்மால்  திறந்துவைக்கப்பட்டது என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவுகூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849102

 

******



(Release ID: 1849125) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Marathi