எஃகுத்துறை அமைச்சகம்
முதல் காலாண்டின் பயன்களை என்எம்டிசி அறிவித்துள்ளது
Posted On:
06 AUG 2022 9:07AM by PIB Chennai
தேசிய தாதுப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி) நேற்று அதன் முதல் காலாண்டின் உற்பத்தியை அறிவித்தது. நிதியாண்டு 23ன் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 8.92 மில்லியன் டன் உற்பத்தி செய்து 7.80 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், என்எம்டிசி 8.91 மில்லியன் டன் உற்பத்தியையும் 9.45 மில்லியன் டன் விற்பனையையும் பதிவு செய்தது.
நிதியாண்டு 23-ன் முதல் காலாண்டில் என்எம்டிசி ரூ.4,767 கோடி வருவாயுடன் நிலையான நிதிநிலையைப் பதிவு செய்தது, வரிக்கு முந்தைய லாபம் ரூ.1,946 கோடி, மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,469 கோடி. நிதியாண்டு 22-ன் முதல் காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் ரூ.6,512 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் முறையே ரூ.4,263 கோடி, ரூ.3,193 கோடியாகவும் இருந்தது.
இந்த விளைவுகள் குறித்து, என்எம்டிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு சுமித் தேவ் கருத்துத் தெரிவிக்கையில், “முன்கூட்டிய பருவமழை, தேவையில் வீழ்ச்சி ஆகியவை முதல் காலாண்டின் மந்தநிலைக்குக் காரணம். ஒரு நேர்மறையான கருத்தில், எங்களின் நிலையான தொழில்நுட்பம், டிஜிட்டல் மற்றும் நிதி வளர்ச்சி, தற்போதைய சவால்களை சரிசெய்து , வருடாந்தர இலக்குகளை என்எம்டிசி அடையும் என்பது ஆறுதல் அளிக்கிறது" என்றார்.
***
(Release ID: 1849051)
Visitor Counter : 180