இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து எதிர்ப்பு செயல்பாடுகளை முறைப்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பான தேசிய ஊக்க மருந்து முகமைக்கு அதிகாரம் அளிப்பதற்காக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா 2022 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
प्रविष्टि तिथि:
03 AUG 2022 8:32PM by PIB Chennai
மாநிலங்களவையில், தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா 2022 இன்று (ஆகஸ்ட் 3, 2022) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மக்களவையில் டிசம்பர் 17 2021 -ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர், நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் ஒருசில முக்கிய உறுப்பினர்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், சில திருத்தங்க4ளுடன், 27 ஜூலை 2022 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது 28 ஜூலை 2022 மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், அரசியல் தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
விளையாட்டுகளில் ஊக்க மருந்து பயன்பாட்டை தடை செய்வதற்கும், நாட்டில் ஊக்க மருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சட்டரீதியான கட்டமைப்பு
முன்மொழியப்பட்ட மசோதா நிறைவேற்ற விரும்புபவை:-
1. ஊக்க மருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்களின் திறன்களை உருவாக்குதல், மேலும் முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல்
2. அனைத்து விளையாட்டு வீரர்களின் உரிமைகளையும் பாதுகாத்தல்
3. குறித்த காலக்கெடுவுக்குள், விளையாட்டு வீரர்களுக்கான நீதியை உறுதி செய்தல்
4. விளையாட்டுகளில் ஊக்க மருந்துக்கு எதிரான போராட்டத்தில், முகவர்களின் ஒத்துழைப்பை அதிகரித்தல்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1848085
***************
(रिलीज़ आईडी: 1848237)
आगंतुक पटल : 350