திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ட்ரோன் தயாரிப்பி்ல் திறன் பயிற்சித் திட்டம்

प्रविष्टि तिथि: 01 AUG 2022 4:17PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ட்ரோன் தயாரிப்பு, பழுது பார்த்தல், பராமரிப்பு பணிகளுக்கான 5 குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 126 தொழில் பயிற்சி மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி ட்ரோன் பழுது பார்ப்பு தொழில்நுட்பம், ட்ரோன் தயாரிப்பு மற்றும் பாகங்கள் இணைப்புத் தொழில்நுட்பம், ட்ரோன் இயக்குபவர், விவசாயப்பணிக்கான ட்ரோன், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரம் தெளித்தல் ட்ரோன் ஆகியவற்றில் குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இத்தகவலை மக்களவையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846984

 

***************


(रिलीज़ आईडी: 1847049) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Manipuri