குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலிருந்து சரக்கு மற்றும் சேவை கொள்முதல்
प्रविष्टि तिथि:
01 AUG 2022 2:26PM by PIB Chennai
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை கொள்முதல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2017-18ஆம் நிதியாண்டில் 26,357.46 கோடி ரூபாய் அளவிற்கும், 2018-19 ஆம் ஆண்டில் 40,399.70 கோடி ரூபாய் அளவிற்கும், 2019-20ஆம் ஆண்டில் 39,049.45 கோடி ரூபாய் அளவிற்கும், 2020-21 ஆம் நிதியாண்டில் 40,817.78 கோடி ரூபாய் அளவிற்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 52,374.22 கோடி ரூபாய் அளவிற்கும் நடப்புநிதியாண்டில் இதுவரை 9,665.35 கோடி ரூபாய் அளவிற்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களிலிருந்து சரக்கு மற்றும் சேவை கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த போது கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846940
***************
(रिलीज़ आईडी: 1847021)
आगंतुक पटल : 222