பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி

प्रविष्टि तिथि: 01 AUG 2022 2:26PM by PIB Chennai

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 12,815 கோடி அளவுக்கு பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  61 நாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  எனினும் சில உத்திகள் காரணமாக அந்த நாடுகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

     கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடிக்கும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடிக்கும் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடிக்கும் பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

     நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரை ரூ.1,387 கோடி அளவிற்கு பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

     இதுகுறித்து மாநிலங்களவையில் திரு நீரஜ் சேகர் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 

*************** 


(रिलीज़ आईडी: 1846962) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Malayalam