பாதுகாப்பு அமைச்சகம்
"ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்குத் தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டது
Posted On:
30 JUL 2022 11:33AM by PIB Chennai
இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில், கார்கில் செக்டாரில் உள்ள டிராஸில் உள்ள 5140வது முனைக்கு , "ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "துப்பாக்கி மலை" என்று பெயரிடப்பட்டது.
இந்திய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு, துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும் 5140வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது, இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது.
பீரங்கி படையின் சார்பில், ட்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பீரங்கிப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.சாவ்லா, லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, தீயணைப்பு மற்றும் ப்யூரி கார்ப்ஸின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஆபரேஷன் விஜய்யில் "கார்கில்" என்ற கெளரவப் பட்டத்தைப் பெற்ற அனைத்து பீரங்கி படைப்பிரிவுகளின் படைவீரர்கள் முன்னிலையில் விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
***************
(Release ID: 1846482)
Visitor Counter : 235