வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நிதியாண்டு 2021-22 இல் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள்
Posted On:
28 JUL 2022 11:25AM by PIB Chennai
நிதியாண்டு 2021-22 இல் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் அதிகபட்சமாக சிங்கப்பூர் (27.01%), அமெரிக்கா (17.94%), மொரிசியஸ் (15.98%), நெதர்லாந்து (7.86%) மற்றும் ஸ்விட்சர்லாந்து (7.31%) நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. யு.என்.சி.டி.ஏ.டி உலக முதலீட்டு அறிக்கை 2022 இன்படி அந்நிய நேரடி முதலீட்டு வரத்துகளின் சர்வதேச நிலவரத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான முதல் 20 பொருளாதாரங்களுள் இந்தியா ஒரு இடம் முன்னேறி 7-ஆம் இடம் வகிக்கிறது.
உற்பத்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நிதியாண்டு 2020-21 உடன் (12.09 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒப்பிடுகையில், நிதியாண்டு 2021-22 இல் (21.34 பில்லியன் அமெரிக்க டாலர்) உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் 76% அதிகரித்துள்ளன.
பெருந்தொற்று மற்றும் சர்வதேச சூழல்களுக்கு இடையேயும் கடந்த ஆண்டின் முதலீட்டு வரத்துகளை விட நிதியாண்டு 21-22 இல் 84,835 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற வகையில் மிக அதிகபட்ச வரத்துகள் இந்தியாவிற்குக் கிடைத்துள்ளன.
நிதியாண்டு 2021-22 இல் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (24.60%), சேவைகள் துறை (12.13%), வாகனங்கள் துறை (11.89%), வணிகம் (7.72%) மற்றும் கட்டுமான (உள்கட்டமைப்பு) நடவடிக்கைகள் (5.52%) புதிய முதலியவற்றில் அதிகபட்ச வரத்துகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் நிதியாண்டு 2021-22 இல் கர்நாடகா (37.55%), மகாராஷ்டிரா (26.26%), தில்லி (13.93%), தமிழ்நாடு (5.10%) மற்றும் ஹரியானாவில் (4.76%) அதிகளவில் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் கிடைத்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845719
***************
(Release ID: 1845760)
Visitor Counter : 413