புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜூன் மாதத்தில் மழைப் பொழிவு நாடு முழுவதும் இயல்பாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 27 JUL 2022 1:28PM by PIB Chennai

தற்போதைய மழைக் காலத்தின் போது 2022 ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் மழைப் பொழிவு இயல்பாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  1971-2020 புள்ளி விவர அடிப்படையில் ஜூன் மாதத்தில் சராசரி மழைப் பொழிவு 165.4 மில்லி மீட்டராக இருந்தது.

     மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக 3 நாள் முன்னதாக மே 29 அன்றே தொடங்கியது என்றார். இதேபோல், நாடு முழுவதும் ஜூலை 8-ம் தேதிக்கு பதிலாக 6 நாள் முன்னதாக ஜூலை 2-ம் தேதியே பருவமழை தொடங்கியது என்றும் அவர் கூறினார்.

     தொடர்ச்சியான கனமழையைப் பொறுத்தவரை சௌராஷ்டிரா, கட்ச், ராஜஸ்தானின் தென்கிழக்குப் பகுதிகள், தமிழ்நாட்டின் வடக்குப்பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவு மழைப் பொழிவு அதிகரித்திருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845274

***************


(रिलीज़ आईडी: 1845341) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Bengali