பாதுகாப்பு அமைச்சகம்

நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களே உபயோகமாக இருக்கும்; நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய வகை மற்றும் தற்சார்பு அடிப்படையிலான ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்: இந்திய ஆயுதங்கள் குறித்த கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்

Posted On: 27 JUL 2022 12:50PM by PIB Chennai

எதிர்கால சவால்களை ஆயுதப்படையினர் எதிர்கொள்வதற்கு வலிமையான மற்றும் தற்சார்பு அடிப்படையிலான புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்திய ராணுவ ஆயுதங்கள் என்ற இரண்டாவது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களே உபயோகமாக இருக்கும் என்று கூறினார். இது பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது அவசியம் என்று தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் திறனில் பிரதிபலிப்பதாக கூறினார். ஆயுத வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமாகிறது என்றும் தெரிவித்தார். உலகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குவதற்கு உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டுமென்று அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மூலம் அத்துறை வலுப்பெறும் என்று மத்திய அரசு உணர்ந்து இத்துறையில் அவர்கள் பங்கேற்பதற்கான பல்வேறு தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக திரு.ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845258

***************



(Release ID: 1845339) Visitor Counter : 200