பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
நாரி சக்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது
Posted On:
22 JUL 2022 5:54PM by PIB Chennai
நாரி சக்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது. இந்த விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான www.awards.gov.in என்பதன் மூலமாக மட்டுமே ஏற்கப்படும்.
2022 அக்டோபர் 31 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் 2022 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதுக்கு பரிசீலிக்கப்படும்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக நலிந்த பிரிவு மற்றும் விளிம்பு நிலை பெண்கள் நலனுக்காக சேவை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக தனிநபர்களுக்கு சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் அதாவது, 2023, மார்ச் 8 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நாரி சக்தி விருது 2022 வழங்கப்படும்.
தகுதிக்கான வகைமை மற்றும் இதர விவரங்கள், நாரி சக்தி விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் https://wcd.nic.in/acts/guidelines-nari-shakti-puraskar-2022-onwards என்ற இணையதளத்தில் காணலாம்
***************
(Release ID: 1843943)
(Release ID: 1844559)
Visitor Counter : 576