மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், “மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் வாய்ப்பு மற்றும் பங்கு” என்ற தலைப்பில் வெபினாரை நடத்தியது
Posted On:
23 JUL 2022 1:47PM by PIB Chennai
மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், வெள்ளிக்கிழமை அன்று “மீன்பிடி கூட்டுறவுகளின் வாய்ப்பு மற்றும் பங்கு” என்ற தலைப்பில் ஒரு வலையரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் முயற்சியில் இது 14 வது வலையரங்கமாகும்.
இந்நிகழ்ச்சிக்கு, மத்திய அரசின் மீன்வளத் துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் (உள்நாட்டு மீன்வளம்) திரு சாகர் மெஹ்ரா, இணைச் செயலாளர் (கடல் மீன்வளம்) டாக்டர் ஜே பாலாஜி ஆகியோர் துறையின் மற்ற அதிகாரிகளுடன் கலந்து கொண்டனர். மீனவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதில், முழுமையான துறைசார் வளர்ச்சியை நோக்கி, மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் முக்கிய பங்கு பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்கு இந்த வலைப்பதிவு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. நிபுணர் குழு உறுப்பினர்கள், மீனவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்வள கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், மாநில வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், மீன்வள கூட்டுறவு அதிகாரிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீன்வளத் துறையில் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு ஒரு முக்கிய பங்கு என அரசு கருதுகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுப்பினர்களைத் திரட்டி, மீன்வளக் கூட்டுறவுகளை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க மத்திய அரசு ஊக்குவிக்கும்.இந்தத் திட்டம், சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் மீனவ சமூகங்களின் நல்வாழ்வை ஒரு முழுமையான முறையில் வெளிக்கொணரும் சாத்தியமான மற்றும் நிலையான மீன் வளர்ப்பு வருமானத்தை உருவாக்குவதுடன், வளர்ச்சியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844156
******
(Release ID: 1844208)