மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அளித்துள்ள உறுதிமொழிக்கு திரு தர்மேந்திர பிரதான் வரவேற்பு தெரிவித்துள்ளார், இந்தியப் பணியாளர்களின் உலகத்தரம் வாய்ந்த திறனில் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 JUL 2022 2:54PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சர் திரு ஜேசன் க்ளாருடன் இன்று விவாதித்தார்.

அப்போது ஆஸ்திரேலியாவில் புதிதாக பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சி அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு க்ளாருக்கு, திரு தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்தார். இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும் என்று அப்போது ஆஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்தார்.  

இம்முடிவை மனப்பூர்வமாக வரவேற்பதாக திரு பிரதான் கூறினார்.  பின்னர், திறன், உயர்கல்வி, பள்ளிக் கல்வி உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து திரு.பிரதான் எடுத்துரைத்தார்.  புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்தும் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சருக்கு திரு தர்மேந்திர பிரதான் விளக்கினார். 

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843409  

***************  


(रिलीज़ आईडी: 1843506) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam