தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தேசிய வேலைவாய்ப்பு சேவை திட்டத்தின் மூலம் கலந்தாய்வு
Posted On:
21 JUL 2022 2:45PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு சேவை திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பொருத்தமான வேலைவாய்ப்பு, அதற்கான கலந்தாய்வு, தொழிற்கல்வி வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்பு குறித்த தகவல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. வேலை தேடுவோருக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் அதற்கான இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், பல்வேறு மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு கலந்தாய்வு மற்றும் தொழிற்கல்வி குறித்த வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 1,57,989 கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843403
***************
(Release ID: 1843503)
Visitor Counter : 171