பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதார் அட்டையை இணைத்தல்

प्रविष्टि तिथि: 20 JUL 2022 2:42PM by PIB Chennai

அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் துணை ஊட்டச்சத்து திட்டம் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து  மேற்கொள்ளப்படும் தொடர் செலவினங்களை உள்ளடக்கியது. எனவே, ஆதார் சட்டம், 2016 பிரிவு-7 இன் விதிகளின்படி, அமைச்சகம் துணை ஊட்டச்சத்து திட்டத்தை அறிவித்தது. திட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கல், பயனாளிகளை அடையாளம் காண அமைச்சகத்திற்கு உதவும்.

ஆதார் எண் இல்லாததால், எந்தக்குழந்தையும் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், தாயின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி இதன் பயன்களை பெறுவதற்கு அணுகலாம்.

5 வயதுக்கு உட்பட்ட 11,47,12,650 குழந்தைகளில்,  2022 ஜூன் 30-ந் தேதி வரை 3,16,70,612 குழந்தைகளுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

***************

(Release ID: 1843011)


(रिलीज़ आईडी: 1843077) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Malayalam