குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர், டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தின உரையாற்றினார்

Posted On: 19 JUL 2022 6:45PM by PIB Chennai

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 4-வது நினைவு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், புதுதில்லியில் இன்று (ஜூலை 19, 2022) உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், டாக்டர் அப்துல் கலாம், அறிவியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதே அளவுக்கு ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் வழங்கினார். சாதாரண மக்களுக்கும் அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டுவது அவருடைய தலையாய பணியாகும். இதை ஒரு அமைப்பாக அவர் செயல்படுத்தினார். அவர் அனைத்து மதத்துறவிகளையும், ஆன்மீகவாதிகளையும் சந்தித்துப் பேசி, ஏதாவது ஒன்றை கற்று கொள்ள விரும்பினார் என்று தெரிவித்தார். அவர் எழுதிய நூல்களுள் 'புதிய இந்தியாவை உருவாக்குதல்' என்ற சிறிய நூலில், துறவிகள் மற்றும் புனிதர்களிடமிருந்து கற்றல் என்ற அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தில், டாக்டர். கலாம், தான் சந்தித்த துறவிகள், புனிதர்கள் குறித்த தனது பார்வையை மரியாதையுடன் முன்வைத்துள்ளார். டாக்டர். கலாம், அறிவியல், தத்துவம் மற்றும் வளர்ச்சி நெறிமுறைகளுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளித்தார் என்று கூறினார்.

டாக்டர். கலாமின் நற்பண்பு மற்றும் அவரது புகழ் இரண்டும் பிரிக்க முடியாத ஒன்றாக இணைந்துள்ளன என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். தேசத்தின் மீது தீரான அன்பு வைத்திருந்த சிறந்தக் குடிமகனை நினைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமைப்படுகிறோம் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842794

**********



(Release ID: 1842834) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Marathi , Hindi