பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடிமைப்பணி பயிற்சி மையங்களுக்கான தேசிய தரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்”; இந்த சிறப்பு மாதிரியை உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவாக்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUL 2022 4:52PM by PIB Chennai

குடிமைப்பணி பயிற்சி மையங்களுக்கான தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கிவைத்தார்.  

அப்போது பேசிய அவர், இந்த சிறப்பு கட்டமைப்பை உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவாக்கியுள்ளது என்றும், விரைவில் உலக அளவில் இந்தியா இதில் முன்மாதிரியாக விளங்கும் என்று நம்புவதாகக் கூறினார். இந்நிகழ்ச்சியில் 25 மத்திய பயிற்சி நிறுவனங்கள், 33 மாநில அளவிலான நிர்வாக பயிற்சி நிறுவனங்கள் மற்றும் குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 103 நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தர நிர்ணயம் இருந்துவரும் நிலையில், முதன் முறையாக பயிற்சி நிறுவனங்களுக்கும் தர நிர்ணய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842387  

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1842442) வருகையாளர் எண்ணிக்கை : 255
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Telugu