நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் தொடங்கவுள்ளது

प्रविष्टि तिथि: 18 JUL 2022 12:12PM by PIB Chennai

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளையும் தானியங்களை பிரபலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் நாளை (19.07.2022) காணொலி காட்சி வாயிலாக தொடங்கவுள்ளது.

தானியங்களை நிலங்களில் பயிரிடும் முறை மற்றும் அதற்கான நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி அளவு மற்றும் தானியங்களின் நுகர்வு ஆகியவற்றின் விவரங்களை நித்தி ஆயோக் மற்றும் உலக உணவு திட்டம் தயாரிக்க உள்ளது. 

இதற்கான நிகழ்ச்சியை நித்தி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தொடங்கி வைக்க உள்ளார். உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் மற்றும் ஆலோசகர் டாக்டர் நீலம் படேல், உலக உணவு திட்ட பிரதிநிதி பிஷோ பராஜுலி, வேளாண் துறை அமைச்சக இணைச் செயலாளர் சுபா தாக்கூர் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842304  

*************** 


(रिलीज़ आईडी: 1842337) आगंतुक पटल : 328
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam