பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2047ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் போது இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது பொறுப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவுபடுத்தினார்

Posted On: 17 JUL 2022 5:27PM by PIB Chennai

மத்திய அரசின் உதவிச் செயலர்களாக மூன்று மாதங்கள் பணிபுரிந்து, அந்தந்த மாநிலப் பணியாளர்களுக்குச் செல்வதற்கு முன்பாக, 2020 ஆம் ஆண்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், இந்தியா 2047ல் சுதந்திரத்தின் 100 ஆண்டு  நிறைவைக் கொண்டாடும் போது அவர்களின் கடமையை நினைவுபடுத்தி, வயது சாதகமாக இருப்பதால், அவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பும், சலுகையும் கிடைக்கும் என்றார்.

 அரசாங்கத்தை குடிமக்களை மையப்படுத்துவதற்கு, தேசிய நிர்வாகத்தில் அர்த்தமுள்ள பரிமாற்றங்கள் மற்றும் திட்டவட்டமான முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இன்றைய குடிமகன், கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற செயல்களில் குரல் கொடுக்க விரும்புவதாக அவர் கூறினார்.

மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் உதவிச் செயலர்களின் கட்டாயப் பணியின் முன்முயற்சி, 2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய பரிசோதனையாகும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், இது இந்திய அரசாங்கத்தின் நலனுக்காக மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றார். இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள பல்வேறு முதன்மைத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக உதவிச் செயலர்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்று அவர் கூறினார். இது அவர்களின் திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை மட்டுமல்லாமல், பிரதமரின் முன் விளக்கமளிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது என்று தெரிவித்தார். ,

 175 அதிகாரிகள் கொண்ட இந்த குழுவில் 108 பொறியியல் பின்னணி கொண்ட அதிகாரிகள் உள்ளனர் மற்றும் மருத்துவம், மேலாண்மை, சட்டம் மற்றும் கலைகளில் பின்னணி கொண்ட பல அதிகாரிகளும் இணைந்துள்ளனர். இடைத்தரகர்கள் மற்றும் கசிவுகளை முற்றிலுமாக அகற்றி, அமைச்சகங்கள் / துறைகள் எவ்வாறு புதுமைகளை உருவாக்கலாம், புதிய யோசனைகளைப் பயன்படுத்தலாம், உயர் தரமான சேவைகளை  மக்களுக்கு நேரடியாக வழங்கலாம் என்பதற்கு அவர்கள் தங்கள் கல்விப் பின்னணியைப் பயன்படுத்தினால் அது மிகவும் பாராட்டத்தக்கது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.  

 நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் இருந்து குடிமக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகள் அதிகரித்து வருவதால், தகவல் தொழில்நுட்பம், இணையம், மொபைல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்றவை, மக்களின் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு உதவ முடிவதுடன். தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் குடிமக்கள் சேவைகளில் தேவையான முன்னேற்றம் மற்றும் அவை தொடர்பான குறைகளை விரைவாக தீர்க்க முடியும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842207

***************



(Release ID: 1842219) Visitor Counter : 171