அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

செல்களில் நுழைவதைத் தடுப்பது மற்றும் தொற்றும் தன்மையைக் குறைப்பதன் மூலம் சார்ஸ்-கொவ்-2-ஐ செயலிழக்கச் செய்யும் புதிய வழிமுறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

Posted On: 13 JUL 2022 4:20PM by PIB Chennai

புதிய வகையில் செயற்கையான அமினோ அமிலத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது சார்ஸ்-கொவ்-2 வைரஸ் செல்களில் நுழைவதைத் தடுப்பது மட்டுமின்றி, வைரஸ் துகள்களை ஒன்றாகக் குவித்து அவற்றின் தொற்றும் தன்மையைக் குறைக்கிறது. இந்தப் புதிய அணுகுமுறை சார்ஸ்-கொவ்-2 போன்ற வைரஸை செயலிழக்கச் செய்யும் மாற்று நடைமுறையாக உள்ளது.

புரதம் – புரதம் இடையேயான தொடர்பு பூட்டும், சாவியும் போன்று இருப்பதாக அறியப்படுகிறது. இந்த தொடர்பை செயற்கையான அமினோ அமிலம் தடுத்து சாவியைப் பூட்டும், பூட்டு சாவியையும் கண்டறிவதிலிருந்து தடுக்கிறது.  இந்திய அறிவியல் கல்விக்கழக விஞ்ஞானிகள் சிஎஸ்ஐஆர் – நுண்ணுயிரியல் தொழில்நுட்ப கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தப் புதிய அமினோ அமில அணுகுமுறையை கண்டறிந்துள்ளனர். இது சார்ஸ்-கொவ்-2 வைரசின் புறப்பகுதியில் உள்ள புரதத்தோடு  இணைந்து அது செயலாற்ற முடியாமல் தடுக்கிறது.  இந்தப் பிணைப்பானது க்ரையோ- எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி மற்றும் இதர உயிரித்தன்மை மாதிரிகள் மூலம் மேலும் விரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த அமினோ அமிலம் சோதனைக் கூடத்தில் உள்ள  பாலூட்டிகளின் செல்களில் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841204

 

<><><><><>(Release ID: 1841284) Visitor Counter : 217