நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு - வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடிப்பு

Posted On: 13 JUL 2022 12:49PM by PIB Chennai

சீனாவின் “குவாங்க்டங்க் ஓப்போ கைப்பேசி தொலைத்தொடர்பு கழக நிறுவன”த்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா, ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைப்பேசி மற்றும் உதிரிபாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ உள்ளிட்ட பல்வேறு கைப்பேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஓப்போ இந்தியா அலுவலக வளாகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது, கைப்பேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை ஓப்போ இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், ஓப்போ இந்தியா, ரூ.2,981 கோடி அளவுக்கு வரி விலக்கு பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், இறக்குமதியின்போது, சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக் கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841150  

                               ***************



(Release ID: 1841180) Visitor Counter : 152