மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

2022 ஜூலை 14 அன்று கால்நடை பராமரிப்பு, கட்டமைப்பு, மேம்பாட்டு நிதிய மாநாடு நடைபெறவுள்ளது

Posted On: 12 JUL 2022 2:22PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு, கட்டமைப்பு, மேம்பாட்டு நிதிய திட்டங்களை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்து, கால்நடை பராமரிப்பு, கட்டமைப்பு நிதிய மாநாட்டில் 75 தொழில் முனைவோரை பாராட்டவுள்ளார்.  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் சஞ்ஜீவ் குமார் பல்யான், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றுவார்கள். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் 2022 ஜூலை 14 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பீம் அரங்கில் கால்நடை பராமரிப்பு, கட்டமைப்பு, மேம்பாட்டு நிதிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அறிவுபகிர்வுக்கான தளத்தை வழங்குதல், ஏஹெச்ஐடிஎஃப்-ன் செயல்பாட்டு விதிமுறைகள் 2.0, மறுசீரமைக்கப்பட்ட ஏஹெச்ஐடிஎஃப் இணையப்பக்கம், கடன் உத்தரவாத இணையப்பக்கம் ஆகியவற்றை தொடங்குதல், ஏஹெச்ஐடிஎஃப் ஆதரவுடன் ஐந்து பெரிய திட்டங்களின் தொடக்கம், தொழில்முனைவோர் / கடன் வழங்குவோர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இடையே தொடர்புடன் இருப்போர், வளர்ந்துவரும் தொழில்முனைவோர் ஆகியோரை பாராட்டுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டம் ரூ.15,000 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு, கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தனிநபராக  தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், விவசாயப் பொருள் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றோரின் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்க இந்தத் திட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இந்த மாநாட்டை இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி மற்றும் தொழில்துறை சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ளது.  இதில் தொழில்முனைவோர், கடன் வழங்குவோர், மத்திய-மாநில அரசு அதிகாரிகள் உட்பட 500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840905

***************



(Release ID: 1840942) Visitor Counter : 137