எஃகுத்துறை அமைச்சகம்
என்.எம்.டி.சி ஐதராபாத் மாரத்தான் 2022: இலச்சினை மற்றும் டி.ஷர்ட் அறிமுகம்
प्रविष्टि तिथि:
12 JUL 2022 10:27AM by PIB Chennai
2022-ஆம் ஆண்டின் என்.எம்.டி.சி (தேசிய தாது மேம்பாட்டுக் கழகம்) ஐதராபாத் மாரத்தான் போட்டிக்கான இலச்சினையையும், பங்கேற்பாளர்கள் அணியும் டி. ஷர்ட்டும் ஐ.டி.எஃப். சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தெலங்கானா அரசுடன் இணைந்து என்.எம்.டி.சி மற்றும் ஐதராபாத் ரன்னர்ஸ் சங்கம் ஆகியவை நேற்று அறிமுகப்படுத்தின. வரும் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஐதராபாத் மாரத்தான் போட்டிக்கு தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி முக்கிய ஆதரவாளராக உள்ளது.
உலகப் புகழ் பெற்ற பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை திருமிகு நிகத் ஜரீன் காணொலி வாயிலாக கலந்து கொண்ட அறிமுக நிகழ்ச்சியில், என்.எம்.டி.சியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு சுமித் தேவ், ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை சந்தை அதிகாரி திரு நாராயண், டி.வி மற்றும் மாரத்தான் இயக்குநர் திரு பிரசாந்த் மோர்பாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் போட்டியில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று முன்னோட்ட நிகழ்ச்சியில், 5 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி அன்று 10 கிலோமீட்டர், அரை மாரத்தான் மற்றும் முழு மாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840856
----
(रिलीज़ आईडी: 1840897)
आगंतुक पटल : 184