நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தால்சர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்துச்செல்ல மகாநதி நிலக்கரி ரயில்வே நிறுவனம்

Posted On: 11 JUL 2022 4:21PM by PIB Chennai

நாட்டில் கண்டறியப்பட்டுள்ள  மொத்த நிலக்கரி வளத்தில் 15% அளவான 52 பிடி (பில்லியன் டன்) நிலக்கரியை  கொண்டுள்ள மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் மிகப்பெரிய  சுரங்கங்களில் ஒன்றாக  தால்சர் நிலக்கரி சுரங்கம்  உள்ளது. தால்சர் நிலக்கரி சுரங்கத்தில் 300 மீட்டர் ஆழத்திலேயே 63% (33 பில்லியன் டன்)  நிலக்கரி கிடைப்பது, அதன் வளத்தை குறிக்கிறது.

தால்சர் நிலக்கரி சுரங்கம் 2022 நிதியாண்டில் 95 மில்லியன் டன்னுக்கும் மேற்பட்ட நிலக்கரியை உற்பத்தி செய்திருப்பதுடன், 2024-25 நிதியாண்டில் 200 மில்லியன் டன் 2030க்குள் 300 மில்லியன் டன் அளவுக்கும் உற்பத்தி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட முறையில் நிலக்கரி அனுப்பப்படுவதை உறுதி செய்ய, மகாநதி நிலக்கரி ரயில்வே நிறுவனம் (MCRL) என்ற பெயரில் ரயில்பாதை ஒன்றை அமைக்கும் பணி தால்சர் நிலக்கரி சுரங்கத்தில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமரின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேசிய பெருந்திட்டத்தின் கீழ் எம்சிஆர்எல் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் அங்குல்-பல்ராம் இடையே 11 கிலோ மீட்டர் தொலைவுக்கான  ரயில்பாதை இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி நிறைவடையும் போது, தால்சர் சுரங்கத்தில் இருந்து 25 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்படும். பல்ராம் –ஜார்படா – டென்டுலாய் இடையிலான 54 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் டிசம்பர் 2025க்குள் செயல்பாட்டுக்குள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840758

***************


(Release ID: 1840796) Visitor Counter : 215